வியாழன், 16 டிசம்பர், 2010



மார்கழி பூ

மார்கழி திங்களை அழகு செய்ய பல உண்டு. அதில் உன்னதமானது கோலம். அம்மா சுசிலா கோலம் போடுவதில் அபார ஞானம் உள்ளவர்கள்.

ஒரு சொர்கவாசல் திறப்புக்கு அம்மா போட்ட கோலம் புதுமையானது.

சொர்கவாசல் வைணவ தொடர்பானது.

அம்மா கோலத்தில் வைணவ குறியீடுகளோடு சிவ குறியீடுகளையும் சேர்த்து நல்லினக்க நோக்கோடு வாசலில் போட்ட கோலமிது.

படைப்புள்ளத்தின் இயல்பான கலகமும் இதில் வெளிப்படுகிறது. கண்ணார களியுங்கள்.
- சுகன்

5 கருத்துகள்:

  1. அன்பின் சுகன் அய்யா,
    நீங்கதான் குசும்பன்னு பார்த்தா, அம்மா ஊமைக்குசும்பா இருப்பாங்க போல :)) இப்பதான் பார்த்தேன்.எங்களுக்காகவாவது உங்க அம்மா இன்னும் சில பல வருடங்கள் இருந்திருக்கலாம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மார்கழியில் கோலம் போடுவதே அலாதியான சுகம். அதிலும் இப்படி வாசலை தாளாக்கி அதில் அழகாய் கவிதை எழுதியிருக்கிறார் அம்மா.. ஆயுதமாகும் கவிதை..!

    பதிலளிநீக்கு
  3. அம்மாவின் படம் ஒன்றை பதிவிடுங்களேன் சுகன்.

    பதிலளிநீக்கு
  4. அம்மா ஊமை குசும்பர் அல்ல. அட்டகாசமான குசும்பர். நீங்க பார்த்த அம்மா கொஞ்சம். இருந்திருக்கலாம்தான். இருக்கவிடவில்லையே காலம்.
    - சுகன்

    பதிலளிநீக்கு
  5. அம்மா படம் முன்பே வந்துவிட்டது. பழைய இடுகையில் இருக்கிறது, என் கவிதையோடு. விரல் கோலம் இரசித்த உங்கள் விழிகளுக்கு நன்றி !
    - சுகன்

    பதிலளிநீக்கு