திராவகக்கவிஞன்
இழிவு கொண்ட
மனிதர்களை
எச்சரிக்கை
செய்யவே
எழுந்து நிற்கும்
மீசையை
முகவரியாய்
வைத்திருந்தான்
முண்டாசுக்கவிஞன்
பல
நூற்றாண்டுகள்
இருண்டுகிடந்த
தமிழ்க்கவிதை
உலகிற்கு
நவீன வெளிச்சம்
பாய்ச்சிய
மின்சாரக்கவிஞன்
தமிழ் எழுத்துகளை
பாரதி
கவிதையாய்
ஒருங்கினைத்த போது
அவை
ஆயுத மொழி பேசின
தமிழ்க்கவிதைக்கு
தீவிரவாதத்தை
கற்றுக்கொடுத்த
திராவகக்கவிஞன்
பிறந்த நாள்
11 -12 -
- சுகன்
"தமிழ்க்கவிதைக்கு
பதிலளிநீக்குதீவிரவாதத்தை
கற்றுக்கொடுத்த
திராவகக்கவிஞன்"
அவன் தமிழ்க் கவிதைக்கு மட்டும் கற்றுத் தரவில்லை தீவிரவாதம், என் போன்ற பெண்களுக்கும் கொஞ்சம் த்ந்து விட்டுப் போனானே...!.
கறுப்பு நிறம் எடுத்ததும் பார்க்க அழகாக உள்ளது. நன்றி...
பதிலளிநீக்கு@ கிருஷ்ணப்ரியா
பதிலளிநீக்கு// தீவிரவாதம், என் போன்ற பெண்களுக்கும் கொஞ்சம் தந்து விட்டுப் போனானே //
நல்லவேளை சொன்னீங்க. நீங்க கவிஞர் மட்டும்தான்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன் :))