வெள்ளி, 10 டிசம்பர், 2010

வெளிச்சப் புள்ளிகள்

பகலின்
நெகடிவ்
இரவு !

மரம் பொறித்த
அப்பளங்கள்
அடடா சருகுகள் !

உதடுகளின்
சண்டை
உச்சரிப்பு...

மனசில்
மச்சம்
காதல் !

ஜனநாயகக்
காக்கையின் எச்சங்கள்
பாதையோர ஏழைகள் !

முட்களின்
சிநேகிதம்
இரத்த முத்தம் !

பயிரின் தலையில்
தங்கக் கொலுசு
நெற்கதிர்கள்

நிலம்
இருமுகிறது
பூகம்பம் !

மனதுக்கு மசக்கை
கவிதை மாங்காய்
தேடுகிறேன் !

தூக்க
வெளியில்
கனவு மேய்ச்சல் !

உயிருக்கு உயிர்
நீர்வார்க்கிறது
இரத்ததானம் !

பகலின்
தாலி
சூரியன்

வசந்தக்
சுவடுகள்
அவளின் கண்கள்

செடி சூரியனோடு
வியாபாரம் செய்கிறது
ஒளிச்சேர்க்கை

பூமியை
அரைப்பது யார்?
புழுதி !

தேர்தல்
எச்சம்
சுட்டு விரலில் மை !

- சுகன்

2 கருத்துகள்:

  1. பூமியை அரைப்பது யார் புழுதி...வேறுபட்டிருக்கிறது. நல்ல கற்பனை.
    பகலின் தாலி சூரியன் அபாரம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி அய்யா. ரசிக்கும்போதுதான் கவிதை பெருமை எய்துகிறது.
    - சுகன்

    பதிலளிநீக்கு