எங்காவது ஒரு மூலையில்
முதிர்ந்த பார்வை
கிரகணம் அகற்றும் !
முழுசாய்
அழுக்கு நீக்கி முடியாது
தொலைந்து கொண்டிருக்கிற
அற்புதங்களுக்கிடையில்
அனுபவம் தேடி
மூச்சு வாங்குகிற
பித்தத்தின் நிழலில்
சிற்பமொன்று
ஒளிந்து கொண்டிருக்கிறது
பழங்காலத்
தீய்ந்த வாசனையோடு !
கடந்து கடந்து ஓடுகிற
என் நெடுவெளிப் பயணத்தில்
பூரணத்துவத்துக்கான
ஒத்திகை
அடிக்கடி நிகழ்ந்து
தோற்கும் !
எங்கோ ஒரு
பிடிபடாத மூலையில்
என்
கேள்விகளுக்கான
சுரப்பு இருக்கலாம்... .. .
கவிதை, ஓளிப்படம் - சுகன்.
காட்டியதும் காட்டாததுமாய் சிந்தையை தூண்டும் கவிதையும் படமும் அழகு அண்ணா.
பதிலளிநீக்கு"தொலைந்து கொண்டிருக்கிற
பதிலளிநீக்குஅற்புதங்களுக்கிடையில்"
அழகான அர்த்தமுள்ள வார்த்தைகள்..... எதையெதையோ தேடி, எத்தனை அற்புதங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறாம்...?
eraaedwin .blogspot .com என்று கொடுத்து வலைப்பட்டியலில் சேருங்கள் சுகன்... w க்கு பதிலாக v போட்டிருக்கிறீர்கள். அதனால் தான் சேரவில்லை
பதிலளிநீக்கு