அவசியம்
அதிர்வுகளின் ஊடே வாழ்க்கை...
ஒவ்வொரு நாளும்
படுக்கப் போகையிலும்
எழுகையிலும்
எது,எப்படி
நம்மைத் தாக்குமோ
என்கிற அச்சத்தைத்
தவிர்க்க முடியவில்லை
ஊடகங்கள்
ஊதிப்பெருத்துக் கிடக்கின்றன
நமது நிம்மதியைக்
கூறுபோட்டபடி
அறிவியல் வளர்ந்து
திமிரெடுத்து அலைகிறது...
மனிதத்தின் உன்னதத்தைக்
கொத்தி, கொத்தி
தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறது...
அலாதியாய்
பயமற்று
காற்றைப் போல அலைகிற
ஆசை
ஆவியாகிக் கொண்டிருக்கிறது...
எதார்த்தமாய் வாழ
எது தடையாய் இருப்பினும்
உடைக்கலாம்...
எல்லாவற்றையும் விட
அவசியமானது
சுதந்திரம்...
கவிதை, நிழற்படம் - சுகன்.
ஆமாம் சுகன் ,
பதிலளிநீக்குஎதையும் உடைக்கலாம் , எதையும் இழக்கலாம் ஏகாந்தச் சுதந்திரம் மட்டும் விளையுமென்றால்
ப்ரியா அவர்களின் உதவியோடு உங்கள் வலை முகவரியை எனது வலையின் முகப்பில் சேர்த்துவிட்டேன். பாருங்களேன் நீங்கள் போட்டவுடன் பார்த்துவிட்டேன். அவர்களுக்கு நன்றியை சொல்லிவிட வேண்டும்
பதிலளிநீக்குநம் நன்றியை கிருஷ்ணப்ரியாவிற்கு சொல்வோம். உங்கள் வலைப்பூவை எம் வலைப்பூவில் சேர்க்க ஆசை. யுஆர்எல் முறையில் சேர் என்று வருகிறது எப்படி சேர்க்க வேண்டும். தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா. கருத்துரைகளுக்கு நன்றி.
பதிலளிநீக்கு- சுகன்.
//அறிவியல் வளர்ந்து
பதிலளிநீக்குதிமிரெடுத்து அலைகிறது...
மனிதத்தின் உன்னதத்தைக்
கொத்தி, கொத்தி
தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறது...//
கவிதையின் மாற்றுருவாய் இருக்கிறது புகைப்படம். அந்தப் பக்கம் நீர்... இந்தப் பக்கம் வேலி... கால்களை விடுத்து சிறகுகளை பயன்படுத்த வேண்டிய நேரம் பறவைக்கு.
தங்களின் கண்ணோட்டம், அதை வெளிப்படுத்தும் இலாவகம் கவனத்துக்குரியதாய் ...எப்போதும் போல் உங்கள் பார்வையின் துல்லியம் சிலாகிக்க வைக்கிறது.
தங்களின் எண்ணம் என் எழுத்தைக் கூராக்கிக் கொள்ள உதவுகிறது. பறவைகளுக்கு மட்டுமல்ல யாருக்கும் சிறகு முளைக்கக் கூடாது என்பதிலேயே ஆண்டைகள் குறியாக இருக்கிறார்கள். நன்றி. - சுகன்.
பதிலளிநீக்கு"ஊடகங்கள்
பதிலளிநீக்குஊதிப்பெருத்துக் கிடக்கின்றன
நமது நிம்மதியைக்
கூறுபோட்டபடி"
உண்மை.... ஊடகங்கள் காட்டும் உலகம் பயம் தருவதாகத் தான் இருக்கிறது. இந்த உலகத்தில் தான் நாம் இருக்கிறோமா என்று எண்ணும் போது தோன்றும் அச்சம் நம்மை நிம்மதியின்றி தவிக்க விடுகிறது...
"அலாதியாய்
பயமற்று
காற்றைப் போல அலைகிற
ஆசை
ஆவியாகிக் கொண்டிருக்கிறது..."
சூழல் வெப்பத்தில் ஆவியாகும் ஆசைகள் எந்த ரூபத்திலும் மீண்டும் நம்மிடம் திரும்பியே வருவதில்லை..... வெந்து வெந்து புலம்ப மட்டுமே முடிகிறது
"எல்லாவற்றையும் விட
பதிலளிநீக்குஅவசியமானது
சுதந்திரம்..."
எத்தனை நிஜம்......
url முறையில் எட்வின் அவர்களின் வலைப்பூவை உங்கள் பக்கத்தில் இன்னும் இணைக்க முடியவில்லையா?
பதிலளிநீக்குகவிதை நிஜம் பேசுகிறது சுகன் .. மிக பொருத்தமான நிழற் படம் .. கூண்டு போல இருந்தால் ஒரு வேளை போராடவேண்டும் என்று தோன்றிவிடும் ... ஆனால் பாருங்கள் எல்லாமே வேலி போலவே இருக்கிறது நகரவிடாமல் அடைக்கிறது .... நல்ல கவிதை
பதிலளிநீக்கு