1.
இழப்பு
தூசில் கிடக்கிறது
ரசனை...
அவகாசம் இல்லை
மொட்டை மாடியிருந்தும்
முழுநிலா ருசிக்க
ஓடிக் கொண்டிருக்கும்
அவசரத்தில்
அந்தி, சந்தி
புசிப்பது யார்?
2.
மௌனமாய் இருப்பது
முடிவெடுத்த வேளையில்
சிணுங்கியது கைப்பேசி.
3.
உதட்டுக்குப்
புன்னகை அழகு
புன்னகை கலைந்து
மௌனம் குந்தப்
பேரழகு
4.
எப்போதும்
வருவதில்லை
எதிர்பார்க்கும் கடிதம்
திடீரென வந்து நிற்பாய்
நடுநிசியில்
கடிதம் எழுதாக்
கோபம் சிதைய.
- சுகன் - நிழற்படம் - சுகன்.
நெசத்துக்குமே இப்படித்தான் கிடக்குது சுகன் வாழ்க்கை. அருமையா சொன்னீங்க
பதிலளிநீக்குநன்றி ஐயா. வாழ்க்கையை என்னதான் நாம் திட்டமிட்டாலும். அது அதன் போக்கில் நம்மை தயாரிக்கிறது, தாக்குகிறது. - சுகன்.
பதிலளிநீக்கு