சாமக்கூத்து
சம்போகம்
முடிந்திருந்தது
வியர்வையின்
குதுகலம்
குரூரமாக
ஒருவருக்கொருவர்
பினைந்துகிடந்தனர்
பிசுபிசுப்பு
அசூசையாய் !
தொடங்கும்போது
இருந்த
ஒத்தசிந்தனை
இல்லாமல்
வெவ்வேறு
திக்கில்
இருவரின்
அனுபவக்கிளர்வுகளும்
அடங்கிக் கொண்டிருந்தன !
அதிர்வுருதலுக்கும்
மீளுதலுக்கும்
இடையே
தொலைத்தார்களா ?
பெற்றார்களா !
கணக்கு
பிடிபடாத
புதிராக
ஜாலம் காட்டி
அறைஎங்கும்
பரிகசித்து நின்றது.
அங்குமிங்குமாய்
மெல்லிய அழுத்தம்
எல்லாம் மறந்து
மீண்டுமொரு
வாழ்கைக்காக
தொடர... தொடர...
பழசே
புதிதாய்
புதிதே
பழசாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக