புதன், 1 டிசம்பர், 2010

ஒவ்வொரு
வருசமும்
நாட்குறிப்பு
வாங்குவேன்
மறக்காமல்

ஆண்டு முடிகையில்
எல்லாமும்
வெற்றுப் பக்கங்களாக

வாழ்வை
எழுத எண்ணி
எழுத எண்ணி
ஒவ்வொரு நாளாக
ஓடியே போய்விட்டது

வருச முடிவில்
பிரச்சனை ஒன்றை
கிளப்பும்
இந்த நாட்குறிப்பு

அம்மா
"கோலம் போட
வச்சுக்கலாமா"

மனைவி
"பால் கணக்கு
எழுதலாம்
எடுத்துக்கட்டுங்களா!"

மகள் -
"அட ஸ்டாம்ப்
ஒட்டிவைக்க
அழகாயிருக்கும்பா"

என்தவிப்பு
யாருக்கு புரியும் !

அலமாரியில்
பத்திரப்படுத்தினேன்

எழுதப்படாத
என் வாழ்வின்
வெற்றுச் சரிதத்தை
நினைவூட்டிக் கொள்ள!
- சுகன்

3 கருத்துகள்:

  1. தயக்கம் உதறித் தொடங்கி விடலாமே... இந்த ஆண்டின் இன்றைய நாட்குறிப்பிலாவது...!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை.. இதற்கு முன்பு நான் பதிவிட்ட கருத்துரையை ஏன் காணவில்லை? அதிகப் படியான கறுப்பு நிறம் ஏனோ பக்கங்களில்..? இலகுவாகப் பார்க்க முடியவில்லை... ஒரு சின்ன கருத்து தான்.

    பதிலளிநீக்கு
  3. முந்தைய கருத்துரைகள் எப்படியோ மறைந்து விட்டன. கருப்பு நிறம் மாற்றிவிட்டேன். வாசித்து இரண்டு வரி சொன்னது மகிழ்வாய் இருந்தது.
    - சுகன்

    பதிலளிநீக்கு