ஞாயிறு, 28 நவம்பர், 2010


த.ச.தமிழனார் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர். அணி இலக்கணம் எழுதியவர். இதழ் நடத்தியதற்காக நெருக்கடிகாலத்தில் பணி நீக்கம் செய்யபட்டவர். புதுகவிதைக்கு இலக்கணம் எழுதியவர். புதுமை கருத்துகள் கொண்டவர். தமிழ்நாட்டில் உள்ள திருவாரூரில்தமிழறிஞர் திரு.வி.கவுக்கு சிலை வைத்தவர். இயற்றமிழ் பயிற்றகம் நடத்தியவர்.
-சுகன்
வ.விஜயபாஸ்கரன் இன்றும் கோவையில் வசிக்கும் எழுத்தாளர். 85 வயதை கடந்தவர். 1955மே மாதம், சரஸ்வதி இலக்கிய இதழை ஆரம்பித்தவர். மறுமலர்ச்சி இலக்கியம் படைத்த இதழ் சரஸ்வதி. 1962 சரஸ்வதி கடைசி இதழ் வந்தது. ஜெயகாந்தன், சுந்தரராமசுவாமி, டி. செல்வராஜ், நா.வானமாமலை, சாமி. சிதம்பரனார் போன்றவர்கள் இதழில் எழுதியவர்களில் சிலர்.
- சுகன்

சனி, 27 நவம்பர், 2010

குன்றம் மு.ராமரத்தினம் 85 வயதை கடந்த பெரியவர். இதழாளர், முங்காரி சிற்றிதழின் ஆசிரியர். தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் தலைவர். சிற்றிதழ்கலுக்கு என்று தனி நூலகம் வேண்டும் என்று ஒரு நேர்காணலில் சுகன் கேட்டதர்கு கோவையில் சிற்றிதழ்கலுக்கு என்று தனி நூலகம் அமைத்தார். அந்த நூலக வாசலை அதிகாலை ஐயா சுத்தம் செய்வதை சுகன் புகைப்படம் எடுத்த காட்சி இது.
- சுகன்

வெள்ளி, 26 நவம்பர், 2010




கோடி முகங்களில்
உனது முகம்
கவிதை முகம்
- சுகன்

வியாழன், 25 நவம்பர், 2010



பால் தெளித்தேன்
அம்மா சாம்பலில்
தாய்ப்பால் மணம் !
- சுகன்

புதன், 24 நவம்பர், 2010

உணக்குள் ளிருக் கும்
தழும்பை
தடவி பார்கிறது
என் நாக்கு
உன் ஞாபகசக்தியீன்
கொலைவெறி புரியாமல் !
- சுகன்

திங்கள், 22 நவம்பர், 2010