செவ்வாய், 30 நவம்பர், 2010

டிசம்பர் சௌந்தரசுகன் இதழ் வந்துவிட்டது. ஆண்டு சந்தா ரூ 180

இலக்கியகுமாரன்ஞானதிரவியம் - சிறுகதை

பாரதிக்குமார் - திரைப்படவிமர்சனம்

வளவ துரையன் - குன்றக்குடி அடிகளார் கட்டுரை

க.சு.சரவணன் - வாழ்த்தட்டும் தலைமுறை கட்டுரை

ந.செல்வன் - வேர்களின் பயணம் கட்டுரை

இரா.எட்வின் - சிறப்பு கட்டுரை

கவிதைகள் - வாழை குமார், புதியமாதவி, மஞ்சுளா, ரவீந்தரபாரதி, வெற்றிப்பேரொளி

அட்டை ஓவியம் - கவியோவியத்தமிழன்

கூர் - இதழ் முகவரி -
அம்மாவீடு, சி-46 , இரண்டாம்தெரு, முனிசிபல் காலனி, தஞ்சாவூர் - 613007


திங்கள், 29 நவம்பர், 2010


தியாகி கே.வி.திருஞானம், சௌந்தரசுகன் நிறுவனர். இந்திய விடுதலைக்கு போராடியவர். விடுதலைக்குப் பின் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடி சிறை சென்றவர். ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமைக்கான போராட்டத்தில் அருவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். தலை வெட்டு காயத்தோடு உயிர் தப்பினார். சாகும் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர். தஞ்சை மாவட்ட இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் பொது செயலாளர் ஆகவும். தஞ்சை மாவட்ட ஹரிஜன் செல் துணை தலைவராகவும் இருந்தார். தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்தார். 1987 ஆம் ஆண்டு 28 ஆம் நாள் படித்துகொண்டு இருக்கும்போதே உயிர் போய்விட்டது. தமிழ். ஆங்கில, சமஸ்கிரித மொழிகளில் புலமை மிக்கவர். புகழ் பெட்ற ஜோதிடர்.
-சுகன்